உடல் எடை பிரச்சனையா.?! இந்த ரெண்டு விஷயத்துல கவனமா இருங்க.! - Seithipunal
Seithipunal


நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட சில பழங்கள் நம் உடலில் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி கொழுப்பை கரைப்பதை கடினமாக்கும் என்பது தெரியுமா.? 

சில பழங்களை சாப்பிடும் போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோய் கொண்டவர்கள் மற்றும் உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் அந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.  

தொப்பையை குறைக்க விரும்பும் நபர்கள் அதிக கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும் பழங்களை சாப்பிடக்கூடாது. கார்போஹைட்ரேட் அதிகரிப்பு உடல் எடை போடுவதால் இது ரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்துவதுடன் உடல் பருமனையும் அதிகரிக்கிறது. இதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் ஏறி பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். 

இதய நோய் மற்றும் சிறுநீரக தொந்தரவுகளை ஏற்படுத்த கூடும். குறிப்பாக கோடையில் அதிக நபர்கள் விரும்பி உண்ணும் பழம் மாம்பழம் தான். இது சுவை மிகுந்த பழம் என்பதால் இதை சாப்பிட நிறைய பேர் ஆர்வம் காட்டுவார்கள். இதில் நிறைய சர்க்கரை இருப்பதால் உடல் எடை அதிகரிக்க இது காரணமாகிவிடும்.

மாம்பழத்தை அளவுடன் சாப்பிடுவது விட்டமின் ஏ கிடைக்க உதவும். அதில் உள்ள பீட்டா கரோட்டின் நோய் தடுப்பு நிவாரணையாக இருக்கும். கண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். இதிலிருக்கும் 'பெக்டின்' இரத்தக் குழாயில் கொழுப்புத் திட்டுக்கள் படிவதைத் தடுக்கும். 

மேலும் நாம் விரும்பி சாப்பிடக்கூடிய அன்னாசி பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. அதை அதிகமாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் அன்னாசி பழத்தை அதிக அளவு சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆனால் இதை அளவுடன் சாப்பிடுவது நம் உடலில் விட்டமின் சி கிடைக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mango and Pineapple to Avoid fat bodies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->