உஷார்.!ஆண்களே இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்... மருத்துவர்கள் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பெண்களை விட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. பெண்களை விட ஆண்கள் விரைவாக இறப்பதற்கு காரணம் பல்வேறாக இருந்தாலும் பொதுவாக ஆண்கள் எந்த ஒரு விஷயத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை போன்றவற்றிற்கு  முக்கியத்துவம் தருவதும் கிடையாது. உடலில் ஏற்படும் சில நோய்களுக்கான அறிகுறிகளையும் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். பின்வரும் அறிகுறிகள் ஆண்களுக்கு இருந்தால் அவர்கள் கட்டாயம் மருத்துவரை சந்தித்தே ஆக வேண்டும்.

நெஞ்சுவலி:

எல்லா நெஞ்சு வலியுமே மாரடைப்பிற்கான அறிகுறி இல்லை என்றாலும் நெஞ்சு வலியை நாம் எப்போதும் புறக்கணிக்கக் கூடாது. ஒருவருக்கு வியர்வை மற்றும் வயிற்று வலியுடன் நெஞ்சு வலி இருக்கும் போது  அது தொடர்பாக கட்டாயம் மருத்துவரை சந்தித்தே ஆக வேண்டும். இது ஆஞ்சினா அல்லது இஸ்கிமிக்  என்ற இதய  நோயாக இருக்கலாம் அல்லது மாரடைப்பு  அறிகுறியாக கூட இருக்கலாம்.

திடீர் எடை ஏற்றம் அல்லது இறக்கம்:

ஒருவருக்கே உடல் எடை கூடுவது மற்றும் குறைவது பொதுவான ஒன்றாக இருந்தாலும் உடற்பயிற்சி மற்றும்  டயட் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் உடல் எடையில் ஐந்து பவுண்டு  ஏற்ற இறக்கம் இருந்தால் ஹைப்போ தைராய்டிசம் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலத்தில் மாற்றங்கள்:

நாம் மலம் கழிக்கும் போது அவற்றின் நிலைத்தன்மை மற்றும் நிறம் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் . மஞ்சளாக இல்லாமல் கருப்பு அல்லது சிவப்பு நிறமாக மலம் கழித்தால் மலத்தோடு சேர்ந்து ரத்தமும் வெளியேறுகிறது என்று அர்த்தம் . இது பெருங்குடலில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது போன்ற மாற்றங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று பரிசோதித்துக் கொள்வது நம்மை பெரிய ஆபத்துகளில் இருந்து காக்க உதவும்.

சிறுநீரில் மாற்றங்கள்:

சிறுநீர் கழிப்பதில் சிரமம் வலி  மற்றும் எரிச்சல் சிறுநீர் ஓட்டத்தில் மாற்றங்கள் ஆகியவற்றையும்  கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள்  புரோஸ்டேட் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது போன்ற அறிகுறிகளை முன்கூட்டியே  கவனித்து மருத்துவரை கலந்தாலோசிப்பதால் புற்றுநோய் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

காலில் தசை பிடிப்பு:

கடினமான உடல் உழைப்பு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றின் மூலம்  கால்களில் தசை பிடிப்பு ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான் என்றாலும் சாதாரணமாக நடக்கும் போது ஏற்படும் தசைப்பிடிப்பு ஆபத்தானது இது இடைப்பட்ட கிளாடிகேஷன் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இதுபோன்ற தசை பிடிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men dont take these symptoms for granted doctors warn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->