உஷார்.! மருத்துவர்கள் தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்.! செல்போன் பயன்பாட்டாளர்கள் கவனத்திற்கு.!
Mobile phone Users Gets Neuron issues
என்னதான் மருத்துவ நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதிக நேரம் செல்போன்கள் அல்லது கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவது உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகளை கொடுக்கும் என்று கூறினாலும் நாம் அதை கேட்பதே இல்லை.
இதன் காரணமாக சமீபத்தில் கூட ஒரு பெண் தனது கண் பார்வையை இழந்ததாக செய்திகளை படித்தோம். ஆனால், அப்படியும் இந்த பயன்பாடுகளை நாம் குறைத்துக் கொண்ட பாடில்லை.
இந்த மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் கண் பார்வை மட்டுமல்லாமல் நமக்கு டெக்ஸ்ட் நெக் சென்ட்ரம் என்ற கழுத்து நரம்பு பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்த பிரச்சனை பலருக்கு காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கழுத்து பிரச்சனையால் தோள்பட்டை வலி, தலைவலி, மன உளைச்சல் மற்றும் தூக்கமற்றுபோவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பிரச்சனைகளுக்கு வலி நிவாரணியை பயன்படுத்துவது மட்டுமே ஒரு தீர்வாக இருக்காது. மொபைல் பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துக் கொண்டு அனைவரும் யோகா செய்வதுதான் சரியான தீர்வு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
English Summary
Mobile phone Users Gets Neuron issues