குரங்கம்மை நோய் பற்றிய நமக்கு தெரிய வேண்டிய முக்கியமான விஷயங்கள்.!
Monkey Pox Awareness
குரங்கு அம்மை நோய் சமீப காலமாக இந்தியாவில் ஓரிரு நபர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இருப்பினும், இந்த நோய் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இந்த நோய் பற்றிய விழிப்புணர்வுடன் மக்கள் இருக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் தற்போது குரங்கு அம்மை நோய் பற்றிய முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்வோம். குரங்கு அம்மை நோய் வைரஸால் பரவுகின்ற ஒரு தொற்று நோயாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
இந்த குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள்:
குரங்கு அம்மை நோய் ஏற்பட்டால் காய்ச்சல் இருக்கும்.
தோல், கைகால்கள் சிவந்து உள்ளங்கைகள் முகம் அனைத்திலும் அம்மை போன்று ஒரு கட்டி அல்லது புண் ஏற்படக்கூடும்.
இதனால், நிணநீர் மண்டலம் பெரிதாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.
உடல் சோர்வு, தலைவலி ஆகியவை ஏற்படும்.
மேலும், தொண்டையில் வலி, குரல் மாற்றம், இருமல் உள்ளிட்டவை ஏற்படலாம்.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயகட்டுப்பாடு அவசியம் வேண்டும்.
இதன் அடையாளங்கள் தானாகவே தோன்றி மறையும்.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஆன்டிசெப்டிக் திரவங்கள் மூலம் உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தனிமைப் படுத்திக் கொள்ளுதல் அவசியம்.