மருத்துவ குணம் நிறைந்த ''முடக்கத்தான் கீரை'' சாப்பிடுவதால் என்ன பயன்.?
Mutakathan Keerai medicinal properties
* மருத்துவ குணங்கள் நிறைந்த முடக்கத்தான் கீரை கிராமப்புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் முடக்குவாதம், நரம்பு தளர்ச்சி போன்றவை குணமடையும்.
* முடக்கத்தான் கீரையில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாது பொருட்கள் அதிக அளவில் உள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
* முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், பாதவாதம் போன்ற நோய்கள் குணமடையும்.
* வாய்வு தொல்லை இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிடுவது நல்லது. மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு முடக்கத்தான் கீரை நல்ல மருந்தாக செயல்படும்.
* இடுப்பு, பாதம், கை, கால், முட்டிகளில் ஏற்படும் வலியை போக்குவதற்கு முடக்கத்தான் கீரை உதவுகிறது. முடக்கத்தான் கீரை உட்கொள்வதால் மூட்டுகளில் இருக்கும் யூட்ரிக் ஆசிட் சிறுநீரகத்திற்கு எடுத்துச் சென்று வெளியேற்றும். இதனால் உடல் சோர்வு ஏற்படாது.
* முடக்கத்தான் கீரையை தோசை மாவில் சேர்த்து அரைத்து சாப்பிட வேண்டும். முடக்கத்தான் கீரையை கொதிக்க வைத்து உட்கொள்ளக்கூடாது.
* முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணையில் வதக்கி உட்கொண்டால் மூட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி, உடல் வலி போன்றவை குணமடையும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும்.
English Summary
Mutakathan Keerai medicinal properties