மக்களே உஷார்! தூக்கமின்மை மட்டுமல்ல...அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்துதான்! எளிய தீர்வுகள்!
Not just lack of sleep sleeping too much is also dangerous
தூக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவது அவசியமானது. பொதுவாக, ஒருவர் தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 8 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம், நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தூக்கம் அதிகமாகியால் மனச்சோர்வு, அறிவாற்றல் குறைபாடு, தலைவலி போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படக்கூடும். அதேபோல், போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, கவலை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அபாயம் அதிகம்.
இதனால், தூக்க நேரத்தை சரியாகப் பின்பற்றுதல் மிகவும் அவசியமாகும். தூக்கத்திற்காக மருந்துகள் சாப்பிடுவது, அதிக இரவில் நெடுநேரம் விழித்திருப்பது, அல்சோஹால் உபயோகிப்பது, ஹைப்போதைராய்டிசம், இதய நோய் போன்றவை அதிக நேரம் தூங்குவதற்கான முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, தூக்கம் ஒரு முக்கியமான அம்சம். சரியான அளவில் தூங்கினால், ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்டாட முடியும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
English Summary
Not just lack of sleep sleeping too much is also dangerous