நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்! ரெஸிபி இதோ! - Seithipunal
Seithipunal


நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கவும்  நோய் வராமல் தடுக்கவும் உதவும்  சுவையான வெங்காய சூப் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
 
பெரிய வெங்காயம்  - 4
 பூண்டு பல் - 4
 பச்சை மிளகாய்  - 2
தேங்காய் பால்  - 1/2  கப் 
வெண்ணெய் - 1  டேபிள் ஸ்பூன்  
மிளகுத்தூள் - 1  டீஸ்பூன் 
பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு - 1  டீஸ்பூன் 
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை - 2  டேபிள் ஸ்பூன் 
உப்பு -  தேவையான அளவு

செய்முறை :,

வாணலியில் வெண்ணையை சேர்த்து அது சூடாகி உருகியதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் மூன்று கப் நீர் சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும். வெந்ததும்  சிறிது நேரம் ஆறவிட்டு வடிகட்டி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன்   கரைத்து வைத்த சோள மாவு மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும்  தேங்காய் பால் ஊற்றி  கொதிக்க விட்டு மல்லித்தழையைத் தூவி இறக்கி விட வேண்டும்.

வெங்காய கஞ்சியில் வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

onion soup receipe to boost immunity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->