கலர் அப்பளம் சாப்பிடுபவர்களுக்கு கேன்சர் தாக்க வாய்ப்பு.. வெளியான அதிர்ச்சித் தகவல்.! - Seithipunal
Seithipunal


கலர் அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் கேன்சர் தாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சாதாரணமாக விற்கப்பட்ட அப்பளங்கள் தற்போது கலர் சேர்த்து மக்களை கவரும் வகையில் விற்கப்படுகின்றன. வண்ணத்தில் கவரும் மக்கள் அதை வாங்கி சென்று பொரித்து சாப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கும் இந்த வண்ண நிறத்தால் ஈர்க்கப்பட்டு அதிகமாக சாப்பிடுகின்றனர்.

ஆனால் வண்ணம் சேர்க்காத அப்புறம் தான் சாப்பிட வேண்டும் என்றும், இது போன்ற ரசாயன நிறமிகள் சேர்க்கப்பட்ட அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக உணவுத் துறை அதிகாரி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கலர் அப்பளம் மற்றும் பற்களில் சிந்தடிக் வகையான வேதிப் பொருள் உள்ளது என்றும், அது குடலில் போய் தங்கி ஒற்றுமையை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அப்பளம் சாப்பிட ஆசைப்படுபவர்கள் கலர் இல்லாத அப்புறம் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே கடைகளில் கலர் சேர்த்து விற்கப்படும் அப்பளம் மற்றும் வத்தல் ஆகியவற்றை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People eat color appalam are more likely to get cancer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->