''சீனி துளசி''யில் இவ்வளவு மருத்துவ குணங்களா? வாங்க பார்க்கலாம்.!  - Seithipunal
Seithipunal



சீனி துளசி என்ற தாவரம் தென் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த செடி மூன்று அடி வரை வளரும். மண் கலந்த களிமண்ணில் இந்த செடி வளரும். வீடுகளில் இந்த செடியை தொட்டிகளிலும் வளர்க்கலாம். 

* சீனி துளசியின் இலையில் கார்போஹைட்ரேட், கால்சியம், வைட்டமின், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீனி துளசி மிக முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இந்த செடியின் தண்டு, இலைகள் இனிப்பாக இருக்கும். 

* டீ, காபியில் சர்க்கரைக்கு பதிலாக சீனி துளசி இலைகளை போட்டு குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். சீனி துளசி இலைகளை தினமும் மென்று சாப்பிட்டால் தோல் வியாதிகள் குணமடையும். 

* உடம்பில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறும். வாய் புண் மற்றும் வாய் துர்நாற்றம் பிரச்சனைகளுக்கு சீனி துளசி இலை மருந்தாக பயன்படுகிறது. ரத்த அழுத்தம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும். 

* வயிற்றுப்போக்கு பிரச்சனையை சீனி துளசி இலைகள் குணமாக்கும். சீனி துளசி இலையில் 0 கலோரி உள்ளது. அழகு சாதனை பொருட்களிலும் இந்த இலைகள் பயன்படுத்தப்படுகிறது. சீனி துளசி இலைகளில் இருந்து மாத்திரை, எண்ணெய், ஸ்வீட் தயாரிக்கப்படுகிறது. 

* சோடா போன்ற பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்று உப்புசம் போக்க ஜப்பானில் இந்த பொடி பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. முதிர்ந்த இலைகளை வெயிலில் உலர்த்தி பொடி செய்து பயன்படுத்தலாம். இந்த இலைகளை ஐஸ்கிரீம், சாக்லேட், அல்வா போன்ற ஸ்வீட்களில் சேர்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeni thulasi medicinal properties in tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->