பருவகால நோய்களை தடுக்கும் சூப்.. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட உடனே குடியுங்கள்.!
soup for immunity power
தேவையானவை:
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடிபொடியாக நறுக்கியது).
தூதுவளை இலைகள் - 10.
தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை,
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு,
துளசி இலைகள் - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடியளவு
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை :
ஒரு வாணலில் பூண்டு, தூதுவளை இலைகள், இஞ்சி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா, துளசி இலைகள், வெங்காயம், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
அதன் பின்னர், இறக்கி வடிகட்டிய பின் மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக குடிக்கவும்
குறிப்பு :
இந்த சூப் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கும் .
மேலும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை குணப்படுத்தப்படும்.