டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும், தடுப்பு நடவடிக்கைகளும்... தெரிந்து கொள்ளலாம் வாங்க..!! - Seithipunal
Seithipunal


மழைக் காலம் வந்துவிட்டாலே கூடவே அழையா விருந்தாளியாக பல்வேறு நோய்களும், தொற்றுக்களும் வந்து விடுகின்றன. அதுவும் மழைக் காலத்தில் கொசுக்களின் எண்னிக்கை அதிகமாக இருப்பதால், இந்தக் கொசுக்களின் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் வேகமாகப் பரவும். 

டெங்குவால் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்கப் படாவிட்டால், அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்தப் பதிவில் கொடிய நோயான டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம். 

அறிகுறிகள் :

* கடுமையான தலைவலி 

* கண் வலி 

* காய்ச்சல் 

* உடலில் அரிப்பு 

* வாந்தி, குமட்டல் 

* எலும்பு மற்றும் தசை வலி 

* மூட்டுக்களில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

எப்படி தடுப்பது?

தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப் படவில்லை. இது கொசுக்களால் பரவுவதால் வீட்டில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

* தண்ணீரில் தான் கொசுக்கள் முட்டையிடும் என்பதால், வீட்டில் சேமிக்கப்படும் தண்ணீரை மூடி வைத்தல் அவசியம். 

* அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்வதோடு, இரவு நேரங்களில் கொசு வலை உபயோகப் படுத்த வேண்டும். 

* வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

* மாலை வேளைகளில் கண்டிப்பாக ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி விட வேண்டும். 

* மேலும் குழந்தைகளுக்கு எப்போதும் முழு கையுள்ள ஆடைகளையே அணிவிக்க வேண்டும். 

பொதுவாக டெங்கு கொசுக்கள் பகலில் தான் கடிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையில்லை. டெங்கு கொசுக்கள் பகல், இரவு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கடிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Symptoms and Prevention of Dengue Fever


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->