இரவு நேரத்தில் 'இந்த' அறிகுறிகள் தெரிந்தால்.. அதை அலட்சியப் படுத்தாதீங்க..!! மாரடைப்பாக இருக்கலாம்..!! - Seithipunal
Seithipunal


முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு வரும். ஆனால் சமீப காலமாக மிக இள வயதில் இருப்பவர்களும் மாரடைப்பால் உயிரிழப்பதைப் பார்க்கிறோம். அதற்கு மாறி வரும் உணவுப் பழக்கமும், வாழ்வியல் முறைகளும் தான் காரணம். 

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு ஒரு சில அறிகுறிகள் தெரியும். பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. இரவில் மாரடைப்பு வருவதற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். 

1. நெஞ்சில் ஏற்படும் அசௌகரியம் :

இரவு நேரத்தில் திடீரென நெஞ்சில் வலியோ, அல்லது அசௌகரியமோ ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கான அறிகுறி. இந்த வலி லேசானதாவோ, அல்லது விட்டு விட்டு வலிப்பதாகவோ இருக்கலாம். 

2. மூச்சுத்திணறல் :

மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதற்கு பல்வேறு பெரிய உடல்நலப் பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம். அதில் முக்கியமான ஒன்று தான் மாரடைப்பு. நெஞ்சில் லேசான வலியுடன், மூச்சுத்திணறல் இருந்தால் யோசிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். 

3. வாந்தி மற்றும் குமட்டல் :

பெரும்பாலும் இதை அனைவரும் செரிமானப் பிரச்சினை என்று அலட்சியப் படுத்தி விடுகிறார்கள். நெஞ்சில் வலியுடன் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்பட்டால், மாரடைப்பு வரப் போகிறது என்று அர்த்தம். 

4. உடல் சோர்வாக இருத்தல் :

திடீரென காரணமே இல்லாமல் பகல் மற்றும் இரவு நேரத்திலும் பலவீனமாக உணர்ந்தால், மாரடைப்பின் அறிகுறி தான் அது. 

5. அஜீரணம் : 

உங்களது குடல் ஆரோக்கியமற்று இருப்பதைக் குறிப்பதே செரிமானப் பிரச்சினைகள் தான். ஆனால் இது மாரடைப்பிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். 

எனவே மேற்கண்ட எந்த அறிகுறிகள் தோன்றினாலும், அலட்சியப் படுத்தாமல் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Symptons Of Night Heart Attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->