இந்த காய்களை சமைக்காமல் சாப்பிட்டா இவ்வளவு நல்லதா.?!
These Vegetables are Good To Eat fresh
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நிறைய காய்கறி பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் என்னதான் கூறி வந்தாலும், பலருக்கும் காய்கறிகளை சாப்பிடுவது கசப்பான விஷயமாக இருக்கிறது.
இந்நிலையில், சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்ன என்ன என்று பார்க்கலாம்.
வெங்காயத்தை அதிகமாக நாம் சமையலில் பயன்படுத்துவோம். இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கிறது. கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும் இந்த வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இரத்த அழுத்தமானது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
பீட்ரூட் அதிகப்படியான இரும்பு சத்து கொண்ட காய். இதை பச்சையாக சாப்பிடுவது உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.
தக்காளியை சாலட் வடிவில் சாப்பிடுவது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் உடலுக்கு கிடைக்க உதவும்.
காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. ஆனால், இதில் புழு, பூச்சிகள் இருக்கக்கூடும் என்பதால் இதை நன்றாக வெட்டி உப்பு தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு சாப்பிடலாம்.
English Summary
These Vegetables are Good To Eat fresh