இஞ்சி - தேன் கலந்து சாப்பிட்டால் இந்த பிரச்சினை ஓடடோடி விடுமாம்.! - Seithipunal
Seithipunal


வயிற்று வலி என்பது பொதுவாக மனிதனுக்கு மிகவும் தொந்தரவு  செய்யக்கூடிய ஒன்றாகும். இது வயிற்று வலியானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அஜீரணக் கோளாறு சிறுநீரக கல் வயிற்றுப்போக்கு அல்சர் இப்படி பல காரணங்களால் ஒரு மனிதனுக்கு வயிற்று வலி ஏற்படக்கூடும். இந்த வயிற்று வலியை போக்க அருமையான ஒரு கை வைத்தியத்தை பார்ப்போம்.

ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதனை நன்றாக கழுவி விட்டு தோல் நீக்கி  நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இஞ்சி நன்றாக கொதித்து சாறு இறங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்ட வேண்டும். சூடு நன்றாக ஆறியதும் அதனுடன் தேன் கலந்து குடித்து வர எப்படிப்பட்ட வயிற்று வலியாக இருந்தாலும் உடனே குணமாகிவிடும்.

இஞ்சியைப் போலவே சோம்பும் வயிற்று வலியை குணப்படுத்த கூடிய மற்றொரு  சிறந்த மருந்தாகும். சோம்புவை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து  அதனை வடிகட்டி எடுத்து சூடாரிய பின்  அவற்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வயிற்று வலி உடனே குணமடையும்.

இதுபோன்று நம் சமையலறையிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்தி   இதுபோன்ற அவ்வப்போது ஏற்படும் வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுத்துவதால்  நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு உடலின் செரிமான தன்மையும் அதிகமாகிறது. இதில் தேன் கலந்து பயன்படுத்தும் போது அது நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது. மேலும் சளி போன்றவை உடலில் தங்காமல் பார்த்துக் கொள்ளும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Try mixing honey with ginger and drink it this problem will not come near


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->