'சம்மர் டைமில்', உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த உணவுகளை 'ட்ரை' பண்ணுங்க!. - Seithipunal
Seithipunal


கொளுத்தும் வெயிலிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் நம் உடல் பருமனை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கவும் கோடை காலங்களில்  சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு பொருட்களை நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பருவ கால பழங்கள் :
பழங்கள் எப்போதும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிப்பவை. அதுவும் வெயில் காலங்களில் பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்வது நம் உடலை நீரேற்றத்துடன் வைப்பது  செரிமானத்திற்கு பயன்படும். மேலும் இவை உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும் உதவுகின்றன. முலாம்பழம், மாம்பழம், தர்பூசணி, செரி வகைகள், அன்னாசி போன்ற பழங்களை  இந்த காலகட்டங்களில் எடுத்துக் கொள்வது நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும்.

சத்து பானம் மோர் மற்றும் தயிர் :
சத்து பானம் கோடை காலத்தில் பருகுவதற்கு மிகவும் ஏற்ற பானமாகும்  இது நம் உடலை  குளிர்ச்சியாக வைப்பது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துக்கள் போன்றவற்றையும் வழங்குகிறது. மோர் மற்றும் தயிர் ஆகியவை நம் உடலில் குளிர்ச்சியை அதிகப்படுத்துவதோடு உடலானது  நீரேற்றத்தோடு இருக்கவும் கோடை வெயிலின் தாக்கத்தை சரி செய்யவும்  பயன்படுகிறது.

 சாலட் :
வெள்ளரிக்காய், கேரட், பீட்ரூட்,  முளைகட்டிய பயிர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சாலட்களை  சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதோடு உடல் குளிர்ச்சியாகவும்  நீரேற்றத்துடனும் இருக்க உதவுகிறது.

 இளநீர் :
இந்தக் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நம் உடலை காத்துக் கொள்ளவும் அதிகப்படியான உஷ்ணத்தினால் வரும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு இயற்கை பானம் இளநீர். இவற்றிலிருக்கும் எலக்ட்ரோலைட்டுகள்  நம் உடலின் சமச்சீர் தன்மையை  மாறாமல் பாதுகாக்கின்றன. மேலும் உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் தருகின்றன.

சிட்ரஸ் பழங்கள் :
வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை கோடை காலங்களில் அதிகமாக பயன்படுத்துவதன் மூலம்  உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றது. மேலும் இவை  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக நம் உடலானது கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது  மற்றும் நம் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

try these foods in summer to avoid heat and keep our body healthy


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->