ஐ.சி.சி. தரவரிசையில் 03-வது இடத்துக்கு தள்ளப்பட்ட வருண் சக்கரவர்த்தி; முதல் இடத்தில் சிம்மாசனம் இட்டுள்ள ஹர்திக் பாண்டியா..! - Seithipunal
Seithipunal


சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. 

இதில் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி 03-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தரவரிசையின் படி, இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண், 706 புள்ளிகளுடன் 02-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

இதில், நியூசிலாந்தின் ஜேக்கப் டபி (723 புள்ளி), 05-வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்திய வீரர்களான ரவி பிஷ்னோய் 674 புள்ளிகளுடன் 07-வது இடம், அர்ஷ்தீப் சிங் 653 புள்ளிகளுடன் 10-வது இடம்பெற்று  'டாப்-10' பட்டியலில் நீடிக்கின்றனர். பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829), திலக் வர்மா (804), சூர்யகுமார் யாதவ் (739) முறையே 02, 04, 05-வது இடத்தை தக்கவைத்துள்ளனர்.

மிரளும், 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (252) 'நம்பர்-1' இடத்தில் தொடர்ந்தும் நீடிக்கிறார். மற்ற இந்திய வீரர்களான அக்சர் படேல் (161), அபிஷேக் சர்மா (148) முறையே 12, 13-வது இடத்தில் தொடர்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Varun Chakravarthy dropped to 03rd position in the ICC rankings


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->