மூல நோய் ஏன் ஏற்படுகிறது?..! அறிகுறிகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலானோர் தங்களின் பல விதமான பழக்க வழக்கத்தின் காரணமாக உடல் நலத்தை குறைத்துக்கொண்டு வருகின்றனர். சரி வர சாப்பிடாமல் இருப்பது, உடல் நலத்தை பாதுகாக்காமல் இருப்பது, மது மற்றும் புகை பழக்கங்கள் என்று பல விதமான பழக்கங்களால் தங்களின் உடல் நலத்தை பராமரிக்காமல் நோய் வாய்ப்பட்டு அவதியுற்று வருகின்றனர். 

இன்றுள்ள பெரும்பாலானோர் கோடைகாலத்திலும் பிற காலத்திலும் அவதியுறும் பிரச்சனையாக மூலம் என்ற பிரச்சனை உள்ளது. இதனை ஆங்கிலத்தில் piles என்றும் கூறுவர்.. இந்த பைல்ஸ் பிரச்சனையானது 45 வயது முதல் 65 வயதிற்குள் இருக்கும் நபர்கள் அதிகளவு அவதிப்படுவது உண்டு. 

இந்த கூற்று அன்றைய காலத்தில் இருந்து வந்த நிலையில்., தற்போதுள்ள இளம் தலைமுறையினர் கூட பைல்ஸ் பிரச்சனையால் அவதியுறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூல நோய்களில் உள் மூலம் மற்றும் வெளி மூலம் என்று இரண்டு வகைகளும் உள்ளது. 

piles, மூலம், மூல நோய், piles diseases,

உள் மூலம் என்று அழைக்கப்படும் உள் மூலமானது மலக்குடலிற்குள் வளரும் தன்மையை கொண்டது. வெளி மூலம் என்று அழைக்கப்படும் வெளி மூலமானது ஆசன வாய்க்கு கீழே வளருவதாகும். 

மூல நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக ஆசன வாய் மற்றும் மலக்குடலில் இருக்கும் நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதன் விளைவாக ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது மேலும் பல காரணங்கள் உள்ளது. அவையாவது., 

பரம்பரை பரம்பரையாக வளருவது., மலச்சிக்கல்., நார்ச்சத்துக்கள் குறையும் வகையில் மேற்கொள்ளப்படும் டயட்., அளவிற்கு அதிகமான எடையை தூக்குவது., உணவின் அழற்சி., உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்., உடலின் அதிக வெப்பம்., கர்ப்பம் மற்றும் அதிக நேரம் அமர்ந்திருந்தல் அல்லது நின்று கொண்டு இருப்பது போன்ற பிரச்னையால் ஏற்படுகிறது. 

இதுமட்டுமல்லாது அளவுக்கு அதிகமான மது அருந்துவது., புகை பிடிப்பது மற்றும் நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாத பட்சத்திலும் மூல நோய் ஏற்படும். இந்த நோய்க்கு அறிகுறியாக முதலில் ஆசன வாயில் ஏற்படும் கடுமையான வலி மற்றும் மலம் கழிக்கும் சமயத்தில் ஏற்படும் இரத்த கசிவு., ஆசன வாயில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஆகும். இவ்வாறான அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை நாடுவது நல்லது. 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what are the caution of piles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->