நீரழிவு நோய் வர இதெல்லாம் கூட காரணமா.? உஷாரா இருங்க.!
What are the reason factors for diabetes
பொதுவாக நீரழிவு நோய் உடல் பருமனாக இருப்பதால், அதிக உடல் உழைப்பில்லா வாழ்க்கைமுறை, சமசீரற்ற உணவு முறை, இவை எல்லாம் தான் காரணமாக இருக்கும். இது இல்லாமல் என்ன காரணங்கள் இருக்கலாம்?
கணைய வீக்கம்:
இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சுரப்பது கணையம் தான். எனவே கணையத்தில் வீக்கம் ஏற்படுதல் கணையத்தை நீக்கி விடுதல் போன்றவை நீரழிவு நோய் வருகிறது.
கஷிங்ஸ் சிண்ட்ரோம்:
இந்த சின்ரோம் கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகளவு சுரக்க செய்து இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை அதிகரிப்பதினால் நீரழிவு நோய் வருவதற்கான ஆபத்து இருக்கிறது.
க்ளுகோகோனோமா:
இந்த க்ளுகோகோனோமா என்பது சமநிலையற்ற இன்சுலின் அளவு மற்றும் க்ளுகோஜென் உற்பத்தி அளவின் தன்மையும் ஏற்படுவதால் உருவாகும் நிலை.
பி சி ஓ எஸ் பிரச்சனை:
இது அதிக உடல் எடையின் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்சனையாகும். இதுவும் இரத்தத்தில் இன்சலின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நீண்டநாள் மனஅழுத்தம்:
பொதுவாக நீண்டநாள் மனஅழுத்தம் நீரழிவுக்கு மறைமுகமான காரணமாகும். மன அழுத்தம் உள்ளவர்கள் பொதுவாக எதிலும் ஆர்வமில்லாமல் ஒரு அறையிலேயே அடைந்து இருப்பதினால் அவர்களுக்கு நீராழிவு நோயின் தாக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.
English Summary
What are the reason factors for diabetes