பல்லுக்கு நிறம் தருவது எது.? பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்.! - Seithipunal
Seithipunal


நம் ஒவ்வொருவர் பல்லிலும் வெளியில் தெரிகிற பகுதிக்கு 'எனாமல்" என்று பெயர். இதற்கு அடுத்த பகுதியாக இருப்பது 'டென்டின்". ஒருவருக்கு டென்டின் எந்த நிறத்தில் அமைகிறதோ அந்த நிறம் தான் அவருடைய பற்களின் நிறம்.

 பொதுவாக, எல்லோருக்கும் சர்க்கரை மாதிரி பற்கள் வெள்ளையாக இருக்காது. முத்துப் போன்ற வெண்மை, வெளிர் மஞ்சள், சந்தன நிறம் என பற்களுக்கு இயற்கையிலேயே பல நிறங்கள் உண்டு. பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள், வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

 எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து 'டென்டின்" எனும் உள்பகுதி வெளியில் தெரியத் தொடங்குவதே முதுமையில் ஏற்படுகின்ற பல்லின் நிறமாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாகும்.

பற்களை சுத்தமாக பராமரிக்க தவறுவது பற்களின் நிறமாற்றத்துக்கு முக்கிய காரணம். பற்களில் உள்ள எனாமல் கரை படிவதால் பல்லின் நிறம் மாறுகிறது. புகைப்பழக்கம், வெற்றிலை, பாக்கு, புகையிலை பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு பற்களின் நிறம் காவி நிறத்துக்கு மாறும். காரணம், புகையிலையில் உள்ள நிக்கோட்டின் ரசாயனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக டென்டின் உறிஞ்சிக்கொண்டே இருக்கும். நாளடைவில் தன் இயல்பான நிறத்தை அது இழந்துவிடும்.

இனிப்பு பண்டங்களை அதிகம் சாப்பிடுவதும், குளிர்பானங்களை அடிக்கடி அருந்துவதும் பற்களின் நிறம் மாறுவதற்கு முக்கிய காரணமாகும். கருப்பு சாக்லேட்டை அதிகமாக சாப்பிட்டால், காபி, கருப்புத் தேநீர், சிவப்பு ஒயின் ஆகியவற்றை அதிக அளவில் குடித்தால் விரைவிலேயே பற்களின் நிறம் மாறிவிடும்.

காபியிலும், தேநீரிலும் உள்ள 'டானின்" ரசாயனம், ஒயினில் உள்ள 'பாலிபினால்' எனும் ரசாயனம் இந்த நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சோயா சாஸ், வினிகர் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போதும் பற்களின் நிறம் மாறலாம். பல்லில் சொத்தை ஏற்படுவது, விபத்தில் அடிபடுவது போன்ற காரணங்களால் பற்கள் கருப்பு நிறத்துக்கு மாறிவிடும்.

 கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே டெட்ராசைக்ளின் போன்ற ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை சாப்பிடும்போது, அவற்றின் பக்கவிளைவாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பற்களில் நிறமாற்றம் காணப்படும். இதுபோல் ரத்தசோகை நோய்க்கு இரும்புச் சத்து மாத்திரை மற்றும் டானிக்குகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குச் சாப்பிடும்போதும் பற்களின் நிறம் கருப்பாக மாறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What gives color to the tooth


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->