பரோட்டாவை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலானோருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் உண்ணக்கூடிய உணவு பட்டியலில் பெரும்பான்மையை தக்கவைத்து இருக்கும் உணவானது பரோட்டா ஆகும். நாம் அதிகளவில் பரோட்டாவை அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். அந்தந்த ஊர்களுக்கு ஏற்றார் போல பரோட்டாவின் பல வகையான பரோட்டாக்கள் இருக்கிறது. 

மதுரையில் பரோட்டவுடன் கொத்துக்கறியுடன் கட்டியாக வைக்கப்பட்ட மட்டன் குருமாவை சாப்பிடுவது., தூத்துக்குடியில் உள்ள பொறிக்கப்பட்ட பரோட்டா., விருதுநகர் எண்ணெய் பரோட்டா மற்றும் இராசபாளையம் அம்சவல்லி கடை பரோட்டாவும் - சைவ குருமாவும் என்று அந்தந்த பரோட்டாக்களுக்கு ஏற்றாற்போல சுவையான மட்டன் மற்றும் சைவ குளம்புகள் இருக்கும். 

parotta, பரோட்டா,

இவற்றை ஊற்றி சாப்பிடும் போது நமது நாக்கு நாட்டியமாடும்.... அந்த வகையில்., சுவைக்காக சாப்பிடும் எந்த ஒரு பொருளும்., அதிகளவு சாப்பிடும் போது தனது பக்க விளைவுகளை காண்பிக்கும். அதிகளவு பரோட்டாவை சாப்பிடுவதால் நமக்கு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும்.  பரோட்டாவை செய்ய பயன்படும் மைதா மாவானது., கோதுமையை அரைக்கும் சமயத்தில் வெளியாகும் தவிடு கொண்டு தயார் செய்யப்படுகிறது. 

எண்ணெய் பரோட்டா, பரோட்டா, parotta,

இந்த பொருளானது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். பொதுவாக நாம் பரோட்டாவை உண்ணும் சமயத்தில் மாலை மற்றும் இரவு நேரத்தில் உண்ணுவதை வழக்கமாக வைத்திருப்போம். நாம் பரோட்டாவை உண்ணுவதால் எந்த விதமான நன்மையும் இல்லை. உடலுக்கு இரத்த அழுத்தத்தை மட்டும் அதிகரிக்க செய்கிறது. 

மதுரை கொத்துக்கறி, மதுரை கொத்துக்கறி பரோட்டா,

இதனால் நமது உடலில் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு., நமது இதயத்திற்கு இரத்தம் செல்லவிடாமல் தடுக்கிறது. இதன் காரணமாக நமது இதயம் பலவீனம் அடைந்து நமது மரணத்திற்கும் வழிவகை செய்கிறது. நாம் பரோட்டாவை அதிகளவு சாப்பிட்டால்., பரோட்டா செரிமானம் அடைவதற்கு அதிகளவு நேரத்தை எடுத்து கொள்கிறது. பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரித்து., உடலுக்கு சோர்வை அதிகரிக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது மனதில் இருக்க வேண்டும். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

what is the bad things for eating parotta


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->