ராமஜெயம் கொலை வழக்கு - விசாரணை அதிகாரிகள் மாற்றம்..!
investigation officers change in ramajeyam murder case
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர போலீஸ், சிபிஐ வரை பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரித்தும் இதுவரை கொலையாளிகள் யார் என்பது கண்டறியப்படவில்லை.
இதையடுத்து வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் இருந்து மாநில காவல்துறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கையடுத்து ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை 2022-ம் ஆண்டு காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார் திருவாரூர் எஸ்.பி. ஆக மாற்றப்பட்டதால் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., தஞ்சை எஸ்.பி. ஆகியோரை சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
investigation officers change in ramajeyam murder case