வயிற்றில் உள்ள கருவின் மூளையை நேரடியாக தாக்கும் கொரோனா! ஆராய்ச்சியில் அதிர்ச்சி!
What is the conclusion of Corona researchers whether it affects the brain of the child through the mother
2020 ஆம் ஆண்டு முதல் உலகையே அச்சுறுத்தி வந்தது கொரோனா என்னும் கொடிய தொற்று நோய் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நோயின் தாக்கத்தின் காரணமாக உலகமே முடங்கியது. இத்தகைய விளைவுகளை ஏற்படுத்திய கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை உருமாறி மக்களை அச்சுறுத்தியே வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த வைரஸின் தாக்கம் நேரடியாக குழந்தைகளையும் தாக்கும் என அமெரிக்காவில் உள்ள ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் குழந்தைகள் பிறந்தவுடன் அவற்றிற்கு கொரோனா பரிசோதனை செய்தால் கொரோனா தொற்று இருப்பதை பரிசோதனையில் தெரிந்துகொள்ள முடியாது எனவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கர்ப்பமாக இருந்த இரண்டு தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட சோதனையில் அவர்களது நஞ்சு கொடியின் மூலம் குழந்தைக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது தெரிந்துள்ளது. ஆனால் குழந்தைகள் பிறந்தவுடன் அவற்றை பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை ஆனாலும் கொரோனா வைரஸின் தாக்கம் குழந்தைகளின் உடலிலிருப்பது தெரிந்திருக்கிறது .
அந்தக் குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே வலிப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை 13 மாதங்களிலேயே இறந்து விட்டது. அந்தக் குழந்தையை பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது அவற்றின் மூலையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் அவை நேரடி தொற்று மையங்களாக இருந்ததும் அந்த ஆறு பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் தம்பதிகள் அதற்கு ஏற்றார் போல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
What is the conclusion of Corona researchers whether it affects the brain of the child through the mother