தேனும், நெய்யும் ஒன்றாக சாப்பிட்டால் இப்படி ஒரு விபரீதமா? அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது. எனவே சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது?

பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ள ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.

தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக்கூடாது. இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக்கூடும்.

முருங்கை, முள்ளங்கி மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக்கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும். 

எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரணம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

வாழைப்பழத்தை தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.

பழங்களை தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும். 

வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அது செரிமான கோளாறை ஏற்படுத்திவிடும். மேலும் கோதுமையை, நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது.

மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் 'வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. 

தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.

பால் மற்றும் மீன் உணவுகளை எப்போதுமே சேர்த்து சாப்பிடக்கூடாது. பால் என்பது குளிர்ச்சியூட்டும் உணவுப்பொருள், ஆனால் மீன் வெப்பமூட்டும் தன்மைக் கொண்டது. இந்த இரண்டு உணவையும் சேர்த்து உண்பது ரத்த சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.

பலாப்பழம், முள்ளங்கி ஆகியவற்றை கறுப்பு உளுந்தில் தயாரான உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் கலப்பது தவறு. உதாரணமாக சமைத்த சாதத்துடன் சாலட் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு உண்டாகும்.

இறைச்சியோடு தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து சாப்பிடுவது தவறு. ஏனென்றால், அதன் காரணமாக அஜீரணம், குமட்டல், வாந்தி, படபடப்பு ஆகியவையும் உண்டாகலாம்.

பால், யோகர்ட், வெள்ளரி, தக்காளி இவற்றோடு எலுமிச்சையை சேர்த்து சாப்பிடுவது தவறான பழக்கம். இது அசிடிட்டிக்கு வழிவகுத்து, வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

பழங்கள் சாப்பிடும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் போன்ற மாவு வகை உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

மேற்கூறிய உணவு முறைகளை பின்பற்றுவதனால் பல்வேறு நோய்கள் மற்றும் உணவினால் வரும் நஞ்சு நிலைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why do not ate mixed honey and ghee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->