உ.பி-யில் அதிர்ச்சி.! திருமண நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 10 குழந்தைகள்... மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


திருமண நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 10 குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள உஷைத் பகுதியில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 10 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, வயிற்று வலி என உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் அனைவரும் சிகிச்சைக்காக குழந்தைகள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், குழந்தைகள் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தலைமை மருத்துவ அதிகாரி பிரதீப் வர்ஷ்னேயின் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, திருமண விழாவில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து மாவட்ட சுகாதாரம் மற்றும் உணவுத் துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 Children fall Ill After Eating At Wedding in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->