தேர்வு அறையில் செல்போனுடன் பிடிபட்ட மாணவன் - தூக்கிட்டு தற்கொலை.!
10 class student sucide in madhya pradesh
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டம் உத்வட் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவனின் பள்ளியில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது.
அப்போது, மாணவன் தேர்வு அறையில் செல்போனை பயன்படுத்தியுள்ளார். இதை பார்த்த ஆசிரியர் அந்த மாணவனிடமிருந்து செல்போனையும், விடைத்தாளையும் வாங்கி விட்டு அந்த மாணவனை கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், வேறு விடைத்தாளை கொடுத்து இதில் எழுதும்படி தெரிவித்துள்ளார்.
இதனால், விரக்தியடைந்த மாணவன் மாற்று விடைத்தாளில் எழுதியுள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதைப்பார்த்த மாணவனின் பெற்றோர் கதறி அழுத்துள்ளனர். இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார், விரைந்து வந்த தற்கொலை செய்துகொண்ட மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனின் இந்தச் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
10 class student sucide in madhya pradesh