#சத்தீஸ்கர் || நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - 10 வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பத்து வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் உள்ள அரன்பூர் சாலையில் இன்று பிற்பகல் ரோந்து சென்ற குழுவினர் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் மற்றும் ஓட்டுநர் ஒருவர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், தந்தேவாடாவின் அரன்பூர் காவல் நிலையப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்காக வந்த எங்கள் 10 டிஆர்ஜி ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். இந்த போராட்டம் கடைசி கட்டத்தில் உள்ளது. நக்சல்கள் தப்பிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 jawans including 11 killed in naxalites blast in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->