இந்தியாவில் புதிதாக 11 வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு..!!
11 new types of corona infection discovered in India
உலகம் முழுவதும் கொரோனா பரவல் சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஜப்பான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிர படுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒவ்வொரு விமானத்திலும் 2 சதவீத பயணிகளுக்கு கட்டாய கொரானா பரிசோதனை செய்யப்படுகிறது.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் தொற்று உறுதியாகும் நபர்களின் மாதிரிகள் மரபணு மாற்றுவரிசை முறை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அவ்வாறு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 19,227 பேருக்கு தோற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மரபணு மாற்றுவரிசை முறை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் உருமறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றில் புதியதாக 11 விதமான துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.
English Summary
11 new types of corona infection discovered in India