ரஷிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய 12 இந்தியர்கள் உயிரிழப்பு.!
12 indian soldires died fight with russian army for against ukrine
சுமார் 2 ஆண்டுகளாக ரஷியா-உக்ரைனுக்கு இடையிலான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் எல்லைகளில் போரிடுவதற்கு ரஷிய ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியர்கள் சிலர் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ரஷிய அரசாங்கத்துடன் இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரஷிய ராணுவத்தில் இருந்து அனைத்து இந்தியர்களையும் விரைவில் வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே ரஷிய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட கேரளாவை சேர்ந்த நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரஷிய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;-
"இன்றைய நிலவரப்படி, ரஷிய ராணுவத்தில் 126 இந்தியர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் 96 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இன்னும் 18 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் உள்ளனர், அவர்களில் 16 பேர் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உக்ரைனில் ரஷிய ராணுவத்திற்காக போராடி சுமார் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்." என்றுத் தெரிவித்தார்.
English Summary
12 indian soldires died fight with russian army for against ukrine