12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி-மத்திய அரசு.!
12 to 14 year old children today covid vaccination
கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் பாதிப்பின் வீரியம் குறைவதற்கு தடுப்பூசியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தேசிய தடுப்பூசி தினமான (மார்ச் 16) இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது,
12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும். ஆன்லைன் மூலமாவோ, தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களிலோ பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இந்த தடுப்பூசிகள் 28 நாள் இடைவெளியில் 2 டோஸ்கள் போட்டுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்துவதற்கு 12 வயது முடிந்ததை தடுப்பூசியை செலுத்துபவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை தடுப்பூசி போட பதிவு செய்து 12 வயதை எட்டவில்லை என்றால் தடுப்பூசி போடக்கூடாது.
12 முதல் 14 வயது வரையிலான பிரிவினருக்கு பிரத்யேக அமர்வுகள் மூலம் தடுப்பூசி போடப்படும். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மையங்களில் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த தடுப்பூசிகளையும் அவர்கள் திட்டமிடாத நிலையில் போட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 முதல் 14 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசிகள் கலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தடுப்பூசி போடுவோருக்கும், தடுப்பூசி குழுவினருக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
60 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களும் இன்று முதல் செலுத்தப்படுகின்றன. 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் (36 வாரங்கள்) ஆனவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இன்று முதல் போடப்படுகிறது.
முதல் 2 டோஸ் தடுப்பூசியாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றில் எது, யாருக்கு செலுத்தப்பட்டதோ, அதுவே பூஸ்டர் டோசாக அவர்களுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
English Summary
12 to 14 year old children today covid vaccination