நடப்பாண்டில் 1,36,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-23 ம் நிதியாண்டில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பதாக நிதியமைச்சகம் கண்டறிந்துள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் (2023-24) நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 36,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2020 ஏப்ரல் முதல் 2023 செப்டம்பர் வரை 57 ஆயிரம் கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தததாக  6,000க்கும் மேற்பட்ட போலி ஐடிசி வழக்குகளை கண்டறிந்துள்ளது. அவற்றில் சம்பந்தப்பட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 91 மோசடியாளர்கள் பிடிபட்டுள்ளனர். வரி ஏய்ப்பவர்களைக் கைது செய்ய வழிவகுத்த மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஜிஎஸ்டி அதிகாரிகள் இரண்டு மாத ஏய்ப்பு தடுப்பு கண்டறியும் முயற்சியை மே மாதம் 16ம் தேதி அன்று தொடங்கினர். முதல் வாரத்திலேயே சுமார் 10,000 போலி பதிவுகள் கண்டறியப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1,36,000 crores gst evasion in current finance year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->