எந்தவித ஆதாரமும் இல்லை! பரந்தூரில் விஜய்! அமைச்சார் அமைச்சர் தங்கம் தென்னரசு பரபரப்பு பேட்டி!
Parandur Airport issue minister thangam thennarasu DMK ADMK eps TVK Vijay
அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியரகளை சந்தித்து தெரிவித்தாவது, "தமிழகத்தின் நிதிநிலை மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரமற்றது.
தமிழ்நாடு அரசு திவாலாகும் நிலையில் உள்ளது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே கடன் எடுக்கப்படுகிறது.
மாநில அரசின் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்காததால் சொந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்திற்காக ரூ.26,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம் குறித்த கேள்விக்கு அமைச்சர், "பரந்தூர் விமான நிலையம் அவசியம் தேவை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.
வளர்ந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அவசியமாகின்றது. தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இது பயன்படும்" என்றார்.
பரந்தூரில் போராடும் மக்களை விஜய் சந்திப்பது குறித்த கேள்வி அமைச்சர், "பரந்தூரில் போராடும் மக்களை ஜனநாயக முறைப்படி யாரும் சந்திக்கலாம். விஜய் மக்களை சந்தித்து கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கலாம்" என்றார்.
English Summary
Parandur Airport issue minister thangam thennarasu DMK ADMK eps TVK Vijay