அதிகாரபூர்வமாக திமுகவில் இணைந்தார் சத்யராஜ் மகள்! பெண்களுக்கு மரியாதையான கட்சி என்று புகழாரம்! - Seithipunal
Seithipunal


ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி காணொளிகளை வெளியிட்டு வரும் திவ்யா சத்யராஜ், விரைவில் அரசியல் கட்சியில் இணையப் போவதாக தெரிவித்திருந்தார்.

திமுகவின் ஆதரவாளர் என்று பலரும் சொல்லி வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திவ்யா சத்தியராஜ் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சியின் போது திமுகவின் பொருளாளர் டிஆர் பாலு,  அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Divya sathyaraj joint to DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->