பின்வாங்கிய விஜய்? பரந்தூர் மக்கள் சந்திப்பில் அதிர்ச்சி திருப்பம்!  - Seithipunal
Seithipunal


பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடிவரும் மக்களை, நாளை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்காக சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மழை காரணமாக தற்போது அந்த நிகழ்ச்சி கைவிடப்படுவதாகவும், மாறாக பரந்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் போராடுகின்ற கிராம மக்களை விஜய் சந்திக்க உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டக் குழுவினரையும் விஜய் சந்திக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 900 நாட்களாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்தை கைவிடக் கூறி, ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

20க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்களை அழித்து, காலம் காலமாக வாழ்கின்ற அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் போராடுகின்ற மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. 

எவ்வளவு எதிர்ப்புகள் எழுந்தாலும் தமிழக அரசு பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதில் உறுதியாக இருப்பதை இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெளிவுபடுத்தி உள்ளார். 

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவது தமிழகத்திற்கு அவசியம் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அது முக்கிய பங்காற்றும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், நாளை பரந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் போராடிவரும் மக்களையும், போராட்டக் குழுவையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Paranthur Airport DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->