அதிகாலை பயங்கர தீ விபத்து..பல லட்ச ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!
Fire breaks out in the early hours of the morning Property worth lakhs of rupees destroyed in fire
காஞ்சிபுரம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் அமைத்துள்ள அட்டை உற்பத்தி செய்யும் ஆலையில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் பல லட்ச ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
காஞ்சிபுரம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் அட்டை உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டிருந்த அட்டைகள் தீப்பற்றி எரிந்தன.இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அட்டை தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
English Summary
Fire breaks out in the early hours of the morning Property worth lakhs of rupees destroyed in fire