#பிபோர்ஜாய் புயல் எதிரொலி: கட்ச் கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு...! - Seithipunal
Seithipunal


பிபோர்ஜாய் புயல் காரணமாக கட்ச் கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் பிபோர்ஜாய் வடக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் துவாரகா (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது மேலும் 14ஆம் தேதி காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15ஆம் தேதி அன்று நண்பகல், மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே கரையை சுடக்கக்கூடும்.

அப்பொழுது காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புயல் காரணமாக இன்று முதல் ஜூன் 16ஆம் தேதி வரை குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.  மேலும் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 Prohibitory Order in Kutch coastal areas due to biborjoi cyclone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->