ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.

2023 ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்:

ஏப்ரல் 1- சனிக்கிழமை - ஆண்டு கணக்கு முடிவு
ஏப்ரல் 2 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 4 - செவ்வாய்கிழமை - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 5 - புதன்கிழமை - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்
ஏப்ரல் 7 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
ஏப்ரல் 8 - 2வது சனிக்கிழமை
ஏப்ரல் 9 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 14 - வெள்ளிக்கிழமை - அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 15 - சனிக்கிழமை - விஷு, பெங்காலி புத்தாண்டு
ஏப்ரல் 16 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 18 - செவ்வாய்க்கிழமை - ஷப்-இ-கத்ர்
ஏப்ரல் 21 - வெள்ளிக்கிழமை - ரம்ஜான்
ஏப்ரல் 22 - 4 வது சனிக்கிழமை
ஏப்ரல் 23 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 30 - ஞாயிற்றுக்கிழமை

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 days holiday to bank reserve Bank of India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->