திடீரென சரிந்து விழுந்த 150 அடி உயர தேர் - ஒருவர் பலி.!
150 feet ther collapse in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே உஸ்கூரில் இன்று மத்தூரம்மா கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவின் போது, பல்வேறு கிராமங்களிலிருந்து பல்வேறு பாதைகள் வழியாக பல கிலோமீட்டர் தூரம் தேர் இழுத்துச்செல்லப்படும்.
இந்த நிலையில் இன்று தேரோட்டம் நடந்த போது பலத்த காற்று வீசப்பட்டதால் 150 அடி உயர தேர் திடீரென சரிந்து விழுந்தது. தேர் கழிந்ததும் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. இதில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை சேதப்படுத்தியது, இருப்பினும் அந்த நிகழ்வில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தேர் இடிந்து விழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி, விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கிய உள்ளூர் அதிகாரிகள் மீது விமர்சனங்களைத் தூண்டின. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
150 feet ther collapse in karnataga