கும்பகோணம் உள்ளிட்ட 8 புதிய பேருந்து நிலையங்கள்! சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை – முக்கிய அறிவிப்புகள்!

புதிய பேருந்து நிலையங்கள்:
கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டமைக்கப்படும்.

பேருந்து நிலைய மேம்பாடு:
கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர் ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்.

புதிய சந்தைகள்:
தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர் ஆகிய நகரங்களில் புதிய சந்தைகள் அமைக்கப்படும்.

சந்தைகள் புதுப்பிப்பு:
திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை போன்ற நகரங்களில் சந்தைகள் மேம்படுத்தப்படும்.

வணிக வளாகம் & வாகன நிறுத்தம்:
வால்பாறையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் உருவாக்கப்படும்.

நவீன இறைச்சிக்கூடங்கள்:
கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம் ஆகிய இடங்களில் நவீன இறைச்சிக்கூடங்கள் அமைக்க திட்டம்.

எரிவாயு தகன மேடைகள்:
கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம் ஆகிய இடங்களில் புதிய எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.

புதிய பாதாள சாக்கடை வசதி:
தென்காசி, இராணிப்பேட்டை ஆகிய நகரங்களில் பாதாள சாக்கடை வசதி மேம்படுத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly New Bus stand announce


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->