தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.!
tamilnadu election commission announce local government election date
தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உள்பட 133 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
tamilnadu election commission announce local government election date