உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.65 கோடி தங்க நகைகள் பறிமுதல்..!
2 crore 65 lakhs worth gold jewelery transported without proper documents confiscated
கர்நாடக மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 2.65 கோடி மதிப்புலான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம் சுங்கேனஹள்ளி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சட்டசபை தேர்தலையொட்டி சோதனை சாவடி அமைத்து, காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார், சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் காரின் இருக்கைக்கு அடியில் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த தங்க நகைகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரூபாய் 2.65 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கார் ஓட்டுநரையும் கைது செய்த போலீசார், இது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 crore 65 lakhs worth gold jewelery transported without proper documents confiscated