சரக்கு வேனில் சிக்கிய ரூ.2.73 கோடி பணம் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையில் அமைந்து உள்ளது பெலகாவி. இந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் நேற்று காலை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சரக்கு வேனில் சட்டவிரோதமாக பணம் கடத்தி வருவதாக பெலகாவி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் புனே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த சரக்கு வேனின் கேபின் பகுதியில் ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதை திறந்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியே 73 லட்சத்து 27 ஆயிரத்து 500 சிக்கியது. உடனே போலீசார் சரக்கு வேனை பறிமுதல் செய்ததுடன் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு வேன் ஓட்டுநர் உள்பட இரண்டு பேரையும் கைது செய்தனர். 

இது தொடர்பாக போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் சரக்கு வேனில் எடுத்து வந்த ரூ.2.73 கோடி சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 crores money seized in maharastra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->