இதுதான் நட்பின் அடையாளமா? ஒருமணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஹடாப்சர் பகுதியில் ஒரே கட்டிடத்தில் 19 வயதுடைய இரண்டு தோழிகள் வசித்து வந்துள்ளனர். சிறு வயது முதலே அவர்கள் இருவரும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை மாலை 6.30 மணியளவில் இரண்டு தோழிகளில் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் கோகுலே உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இதையடுத்து, 4 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் முகப்பு பகுதியில் இருந்து இரவு 7.30 மணியளவில் மற்றொரு தோழி கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். 

இருவர்களில் ஒருவர் வர்த்தக படிப்பும் மற்றொருவர் அனிமேஷன் படிப்பும் படித்து வந்துள்ளனர். அவர்கள் இருந்த அறையில் எந்தவித தடயங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. தோழிகள் இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களும் தெரிய வரவில்லை. 

இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு சில மணிநேர இடைவெளியில், சிறுவயதிலிருந்து தோழிகளாக இருந்த 2 தோழிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியினரிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 girl friends diead in one hour near maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->