#மத்திய பிரதேசம் || சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹ்டோல் மாவட்டத்தில் உள்ள சிங்பூர் ரயில் நிலையம் அருகே இன்று (புதன்கிழமை)காலை 6.30 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர மோதலில் ஒரு இன்ஜின் மீது மற்றொரு ரயிலின் என்ஜின் ஏறிய நிலையில் ரயில் தீ பிடித்தது.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ரயில் பெட்டிகளுக்கு அடியில் இரண்டு ரயில்வே ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து காரணமாக பிலாஸ்பூர் மற்றும் கத்னி வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 goods train collide near singhpur railway station in madhya pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->