நடுவானில்.. இரு இந்தியர்கள் பறக்கும் விமானத்தில் அடிதடி.. பணிப்பெண்கள் திண்டாட்டம்.!  - Seithipunal
Seithipunal


பாங்காக் பகுதியில் இருந்து கொல்கத்தாவை நோக்கி ஒரு தாய்லாந்து விமானம் வந்தது
 இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் இரு இந்தியர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. நடைபாதையில் ஒரு நபர் தனது பேக்கை வைத்துள்ளார்.
 
இதை இன்னொரு நபர் மிதித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி ஹிந்தியில் திட்டிக் கொண்டனர். இதை பார்த்த வேறொருவர் அமைதியாக இரு என்று ஹிந்தியில் தெரிவித்துள்ளார். 

இவர்கள் இருவரும் கெட்ட வார்த்தையில் மாறி மாறி திட்டிக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் ஒரு இந்தியருக்கு உதவியாக அவரது நண்பர்களும் சண்டைக்கு வந்ததால் நிலைமை கை மீறிப் போனது. 3 பேரும் சேர்ந்து ஒரு நபரை திட்டியிருக்கின்றனர். இதை அடுத்து விமான பணிப்பெண் ஓடி வந்து இவர்களை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால் அவரது பேச்சை கண்டு கொள்ளாமல் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு ஈடுபட ஆரம்பித்தனர். உடனே மற்றொரு பணிப்பெம் ஓடி வந்து இவர்களின் சண்டையை பார்த்துவிட்டு விமானிக்கு தகவல் கொடுத்தார். இதை மற்ற பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இதனால், விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Indian peoples fight In Thailand Flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->