பீகார் : இரு தரப்பினரிடையே வன்முறை.! துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி.! 7 பேர் கைது - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் பாட்னாவின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள ஜெதுலி கிராமத்தில் வாகன நிறுத்தம் தொடர்பாக இரு குழுக்களிடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையின் போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ​​கிராமத்தில் உள்ள ஒரு சில வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதையடுத்து இந்த வன்முறை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த வன்முறை தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்பொழுது நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed and 7 arrested in violent firing between two groups in bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->