கர்நாடகாவில் துப்பாக்கிச்சூடு - இரண்டு பேர் பலி - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர்.

கர்நாடக மாநிலம் சிக்கமமகளூரு மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய ரமேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்டவரிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed in firing on two wheelers in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->