ஜம்மு காஷ்மீர் || பாலம் இடிந்து விழுந்ததில் 2 லாரி ஓட்டுநர்கள் காயம்.!
2 lorry drivers injured in bridge collapse in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு டிரக் டிரைவர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் மஹோர் மற்றும் சசானாவை இணைக்கும் படோரா ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் நேற்று இரண்டு லாரிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு லாரிகளும் ஆற்று ஓடையில் விழுந்தது. மேலும் ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த ஓட்டுநர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த ஓட்டுநர்கள் ரஜோரியில் வசிக்கும் அம்ஜித் கான் மற்றும் ஷோகத் அலி என அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சேதம் குறித்து ஆய்வு செய்து பாலம் விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
2 lorry drivers injured in bridge collapse in Jammu Kashmir