2 பேர் பலி!!! ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து! - கோதவரி
2 people killed Boat capsizes in river causing accident Godavari
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் ராஜமுந்திரி மாவட்டம் கோதாவரி ஆற்றில் 12 பேருடன் சென்று கொண்டிருந்த படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் கோதாவரி ஆற்றின் மறு கரையில் இருந்து புஷ்கர் கார்ட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த படகு தண்ணீருக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த 12 பேரும் நீரில் மூழ்கினர். மேலும் இந்த விபத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் என அனைவரும் விரைந்து 10 பேரைக் காப்பாற்றினர்.

2 பேர் பலி:
இதில் பல மணி நேரம் தேடியும் இரண்டு பேர் காணாமல் போயினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆற்றின் கரையோரத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். இதில் உயிரிழந்தவர்கள் ராஜூ மற்றும் அன்னவரம் என நண்பர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவலர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
2 people killed Boat capsizes in river causing accident Godavari