பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை - தென்காசியில் ஆசிரியர் கைது.!
teacher arrested for harassment case in thenkasi
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே வேலாயுதபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பிரான்சிஸ். இவர் புளியங்குடியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தற்போது, அரசு பொது தேர்வை முன்னிட்டு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரான்சிஸ் 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தப் புகாரின் படி குழந்தைகள் நல அலுவலர் அருண்பிரசாத், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, பிரான்சிஸ், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் அருண்பிரசாத் சம்பவம் குறித்து புளியங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் பிரான்சிசை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் புளியங்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher arrested for harassment case in thenkasi