3 இல்ல 30 மொழி கூட கற்றுத்தாருங்கள்... தமிழ்நாட்டை விட்டு விடுங்கள்...! - பா.ஜ.கவிற்கு மு.க. ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரின் தொண்டர்களுக்கு 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் எழுதி இருப்பதாவது, " என் பிறந்தநாளில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அன்பான வாழ்த்துக்களைப் பதிவிட்டு இருந்தனர். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். பாஜக நிர்வாகியான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் எனக்கு மும்மொழியில் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டு இருந்தார். மும்மொழி திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னுடைய பிறந்தநாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில் சகோதரிதமிழிசை மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும் தன் இயக்கத்திற்குரிய பண்பையும் காட்டியிருக்கிறார்.

தமிழிசை:

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் 'இந்தி' இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. ஆங்கிலம்- தமிழ் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு தெலுங்கு மொழியில் வாழ்த்தி இருக்கிறார். இதிலிருந்து மூன்றாவதாக ஒரு மொழியை வழிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கையான தமிழ்நாட்டின் உணர்வையும், எனக்காகப் பிறந்த நாள் வாழ்த்து பதிவின் மூலம் மொழியின் உணர்வை உறுதிப்படுத்தியுள்ள தமிழிசைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய காலத்தில் கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன.

மாணவர்கள்:

ஒரு மொழியில் உள்ள ஒளிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ள வசதிகளும் உருவாகிவிட்டன. ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வது தான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்குச் சுமையாகவே அமையும். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பை கட்டாயமாக்குகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் 3 இல்லை 30 மொழிக் கூட கற்றுத் தாருங்கள். தமிழ்நாட்டை விட்டு விடுங்கள்.


பாஜக ஆட்சியாளர்கள்:

நாங்கள் கேட்பதெல்லாம் இந்தி திணைப்பை நிறுத்துங்கள் என்பதுதான் வட இந்தியர்கள் தமிழோ அல்லது வேறு எந்தத் தென்னிந்திய மொழியும் கற்க நாங்கள் வலியுறுத்தியதே இல்லை. தமிழ்நாட்டில் தற்போது ஓடும் ரயில்களுக்குக் கூட இந்தி சமஸ்கிருதப் பெயர்களை வைப்பதற்கு ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பது தான் அவர்களின் ரகசிய திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமைக் கொண்டது தான் திராவிட இயக்கம்" என அதில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Learn 3 or even 30 languages Leave Tamil Nadu MK Stalin to BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->